கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!

Siva

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (07:37 IST)
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா காலமானார் என்ற தகவல் கர்நாடக மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவர் கர்நாடக மாநிலத்தில் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சிலிக்கான் வேலையாக பெங்களூரு நகரை மாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் எஸ் எம் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ் எம் கிருஷ்ணாவின் வயது 92 ஆகும்.

1962 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பிய எஸ் எம் கிருஷ்ணா பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் அவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்