அட கோடி கோடியா வருமானம் வருது… இப்ப ஏன் டைரக்‌ஷன்?- கில்லர் படத்தை தள்ளிவைத்த எஸ் ஜே சூர்யா!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:54 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால்  எஸ் ஜே சூர்யா, இப்போது 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்க இருந்த கில்லர் என்ற படத்தை இப்போது சில மாதங்கள் தள்ளிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக எஸ் ஜே சூர்யா வெளிநாட்டில் இருந்து ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்