'மெய்யழகன்’ படத்தின் நீளம் குறைப்பா? நெகட்டிவ் விமர்சனத்தால் அதிரடி முடிவு..!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:05 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திடீரென படத்தின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார், அண்ட்க படத்திற்கு பிறகு, இயக்கிய மெய்யழகன் சமீபத்தில் விமர்சகர்கள், ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றது.
 
ஆனால், சிலர் இந்த படத்தை நெகட்டிவாக விமர்சனம் செய்யக் காரணம், படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதே. குறிப்பாக, கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இடையிலான உரையாடல்கள் மிகவும் நீளமாக இருப்பதால், படத்தை காண்போரின் பொறுமையை சோதிக்கும் என்றனர்.
 
இதனை பரிசீலித்த படக்குழு, படத்தின் ரன்னிங் டைமை 2 மணி நேரம் 57 நிமிடங்களில் இருந்து 18 நிமிடங்கள் குறைத்து, 2 மணி நேரம் 39 நிமிடங்களாக மாற்றியுள்ளனர். இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ட்ரிம் செய்யப்பட்ட மெய்யழகன் திரைப்படம் வெளியாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்