கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள் விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவர்கள் ஹிமாக்கரன் அவர்கள், ரேகா அவர்கள், அவர் நண்பர்கள் புரபசர் இஸ்மாயில் அவர்கள், அவர்களோடு சேர்ந்து பேசும்போது, அவர்கள் எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார்கள். சென்னையில் விவசாயம் சார்ந்து என்னென்ன செய்யலாம் என பேசும்போது, சென்னையில் திருவிழா நடத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு முன்னர் நடந்தது, நம் குழந்தைகளுக்குக் கிராமத்தைப் பற்றி, நம் உணவுகள் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தெரியவில்லை, அதைத் தெரியப்படுத்தும் வகையில், பல மாதங்கள் போராடி இந்த செம்பொழில் திருவிழாவை மீண்டும் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்.