ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

vinoth

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:39 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவரை டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்ப சொல்லி அணியின் பயிற்சியாளர் கம்பீர் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாகவும், அதறகாக சிவப்பு பந்தில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் “ஹர்திக் மீண்டும் டெஸ்ட் அணிக்கு வந்தால் அது மிகச்சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அணியில் இருந்தால் அது அணிக்கு பயனுள்ளதாகவும். ஆனால் ஹர்திக்கின் உடலை நான் அறிவேன். அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எளிதான விஷயம் இல்லை. அப்படி அது நடந்தால் அது மிகச்சிறிய ஆச்சர்யமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்