பாகுபலி செண்ட்டிமெண்ட்… ஆர் ஆர் ஆர் ரிலிஸ் தேதி இதுதான்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:07 IST)
ஆர் ஆர் அர் படத்தின் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் சில பல காரணங்களால் ரிலீஸில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் மறுதேதி அறிவிக்கவில்லை. இந்நிலையில் இனிமேல் 3 மாத தாமதத்துக்குப் பின்னர் ஏப்ரல் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்கள் துண்டுபோட்டு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் ரிலிஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி 2 ஆம் பாகம் வெளியான ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று ஆர் ஆர் ஆர் ரிலிஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்