இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது.
ஆனால் இப்போது இந்த படம் சில பல காரணங்களால் ரிலீஸில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஏற்கனவே ரிலிஸில் இருந்து ஒதுங்கிய பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பீம்லா நாயக் திரைப்படம் மறுபடியும் சங்கராந்தி ரிலீஸுக்கு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப் பூர்வ தகவல் இரு படத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை.