பிகில் ட்ரைலரில் மகளை பார்த்து கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர் - குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (12:10 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை  (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாகியது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மாபெரும் சாதனையை படைத்தது. 

 
இந்நிலையில் இந்த ட்ரைலரில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் ஃபுட் பால் வீராங்கனையாக நடித்திருந்தனர். அதில் அவர் பேசும் ஒரு வசனமும் ( "எங்க அப்பாவும் குண்டு எங்க அம்மாவும் குண்டு இதுல நான் எப்படி இருப்பேன்" ) இடம்பெற்றிருந்தது. பிகில் ட்ரைலரில் தனது மகளை கண்டு கண்கலங்கியதாக நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "  அதில், பிகில்  ட்ரைலரில் என் மகளை பார்த்து கண்கலங்கி விட்டேன் என் மகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அட்லீ சாருக்கும் விஜய் சாருக்கும் நன்றி ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

 
ரோபோ ஷங்கரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்