விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் நாயகி இவரா?

செவ்வாய், 26 ஜூலை 2022 (17:42 IST)
விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை எனிமி என்ற படத்தைதயாரித்த வினோத்குமார் தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டுள்ளது வந்ததும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரிது வர்மா சென்னை வந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்புக்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து மார்க் ஆண்டனி படத்தின் நாயகி ரிது தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்