கவனம் ஈர்க்கும் விஷாலின் 'லத்தி' திரைப்பட டீசர்

திங்கள், 25 ஜூலை 2022 (08:50 IST)
விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதையடுத்து நேற்று சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், எஸ் ஜே சூர்யா ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து 5 மொழிகளில் இணையத்தில் வெளியாகியுள்ள டீசர் தற்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்