பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார்களை குற்றம்சாட்டி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். புகார் சுமத்தப்பட்ட பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் நீதி கேட்டு போராடி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக நடிகை ரித்திகா சிங் டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் “மல்யுத்த வீரர்களும் அவரது ஆதரவாளர்களும் நடத்தப்படும் வெட்கக்கேடானது. அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. நம் நாட்டின் மதிப்பை வெளிநாடுகளில் எடுத்துரைக்கும் அந்த வீராங்கனைகளுக்கு நாம் ஆதரவாக இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.