நடிகர்களுடன் படுக்கையைப் பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி – ஆளவந்தான் நடிகை பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:40 IST)
நடிகர் கமலுடன் ஆளவந்தான் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ரவீணா டண்டன் பாலிவுட்டில் நடக்கும் கேஸ்ட்டிங் கவுச் பற்றி பேசியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் இப்போது கே ஜி எஃப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இவர் மீடூ பற்றி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘முதலில் பாலிவுட்டில் எனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. அதற்கு நடிகர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற பாலிவுட்டின் எழுதப்படாத விதி. அதற்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கான வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன’ என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்