அமிதாப் பச்சன் ’அந்த மருத்துவமனைக்கு’ விளம்பரம் செய்கிறார் – ஜான்வி மகிஜா
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (23:14 IST)
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்டார்ஜ் செய்யப்பட்டனர். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஜான்வி மகிஜா என்பவர் நானாவதி மருத்துவமனை பணத்தில் குறியாக உள்ளது என்றும், உங்கள்( அமிதாப் பச்சன் ) மீது இருந்த மரியாதை போய்விட்டது நீங்கள் நானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த அபிதாப், உங்களின் தந்தை நிலைக்கு நான் வருந்துகிறேன். என்னை அங்கு நன்றாக கவனித்துக்கொண்டனர். நான் மருத்துவமனைக்கு விளம்பரம் செய்யவில்லை; என்று தெரிவித்துள்ளார்.