கில்லியால் ஓரம் கட்டப்படும் ரத்னம்? உங்கள சும்மா விடமாட்டேன்! – விஷால் ஆவேச ட்வீட்!

Prasanth Karthick
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (11:34 IST)
நடிகர் விஷாலின் ரத்னம் படம் வெளியாகியுள்ள நிலையில் சில ஏரியாக்களில் விநியோகம் ஆகாததாக கூறப்படும் நிலையில் நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.



ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இன்று ரத்னம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பல திரையரங்குகளில் ரத்னம் படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. கில்லி ரீ ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சமீபத்தில் ஒரு முக்கிய தயாரிப்பாளரை விமர்சித்து விஷால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விஷாலின் முந்தைய பட நஷ்டங்களை காரணம் காட்டி விநியோகஸ்தர்கள் பலர் வேண்டுமென்றே ரத்னத்தை புறக்கணித்ததாகவும் சினிமா ஏரியாக்களில் பேச்சு எழுந்துள்ளது.

ALSO READ: சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால் “இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்த வித பயமோ வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அன்பார்ந்த தஞ்சாவூர் திருச்சி திரையரங்க உரிமையாளர் சங்கம் இன்னமும் கங்காரு நீதிமன்றங்கள் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. உங்களை கண்டிப்பாக தாமதமானாலும் நீதியினால் வெல்வேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களும் வாழ வேண்டும். பொழுதுபோக்குக்காக அவர்கள் படம் எடுக்கவில்லை.

எதற்காக இத்தனை தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை காட்டிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உங்களை நினைத்தால் அவமானமாக உள்ளது. நான் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவராகவோ நடிகராகவோ பேசவில்லை. ஒரு தயாரிப்பாளரின் மகனாக சொல்கிறேன் என்ன நடந்தாலும் வியாழக்கிழமை மாலை சொன்னபடி படத்தை ஆடியன்ஸிடம் கொண்டு செல்வேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்