இரண்டாவது நாளிலும் குறையாத மாஸ்… கில்லி படத்தின் கலெக்‌ஷன் இவ்வளவா?

vinoth

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:25 IST)
நடிகர் மகேஷ் பாபு ஆந்திர சினிமாவின் விஜய் என அழைக்கப்படுபவர். அதே போல அவர் நடித்த சில படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து பெருவெற்றிகளைப் பெற்றுள்ளார். அந்த வகையில் மகேஷ் பாபுவின் ஒக்கடுதான் தமிழில் விஜய் நடிப்பில் கில்லியாக உருவானது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் முதல் நாளில் மட்டும் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாவது நாளிலும் இந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்புக் குறையவில்லை. இதனால் 2 நாட்களில் இந்த படம் 8 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்