அந்த ஆடியோவில் ரத்னம் படத்திற்கான விநியோகத் தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகும் என திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து தனக்கு ஒரு அறிக்கை வந்திருப்பதாகவும் அந்த தொகையை செலுத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்
இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமான வேலை என்று தெரிவித்துள்ள விஷால், தனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். விஷாலின் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.