ரிலீசுக்கு முன்பே ரூ.370 கோடி வசூல் செய்த ரஜினியின் 2.0

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (18:13 IST)
ரஜினிகாந்தின் 2.0 படம் வெளியாவதற்கு முன்பே ரூ.370 கோடியை வசூல் செய்து அபார சாதனை படைத்துள்ளது.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.370 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 
 
2010ம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த படைப்பாக ஷங்கா் இயக்கத்தில் 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய அளவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கா்நாடகா மாநிலங்களில் படம் வெளியீட்டிற்கான உரிமை வெவ்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் படம் வெளியாவதற்கு முன்பே ரூ.370 கோடியை 2.0 வசூல் செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்