சர்காரால் முருகதாஸை கை கழுவிய சன் புரொடக்ஷன்?

சனி, 24 நவம்பர் 2018 (15:51 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
 
இதற்கிடையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை
வைத்து சர்கார் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் பல விதமான சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வந்தது. 
 
மேலும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி தவித்த சர்க்கார் ஒரு வழியாக கடந்த தீபாவளி தினத்தன்று சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே  வெளிவந்து வெற்றி நடைபோட்டது. ஆனால் படம் வெளிவந்த பிறகும் ஆளும் கட்சியினரை தாக்கும் விதத்திலும், அரசின் இலவசங்கள் விமர்ச்சிக்கும் விதத்திலும் சர்ச்சையான காட்சிகள் இடப்பெற்றதால் போராட்டக்களத்தில் குதித்த அரசியல் கட்சியினர் பேனர் கிழிப்பு,  அடிதடி போன்ற வன்முறைகளில்  ஈடுபட்டனர் . 
 
 


சர்கார் படத்தை தொடர்ந்து,  ஏஆர் முருகதாஸ் அடுத்தாக ரஜினியை
வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை ரஜினியின் பேட்ட படத்தை தயாரித்துள்ள சன் பிச்சர் நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்தது. இதனை முருகதாஸ் தரப்பிலும் கிட்டத்தட்ட உறுதி செய்தது. 
 
ஆனால் தற்போது முருகதாஸ் மற்றும் ரஜினி கூட்டணியில் முதன்முதலாக உருவாகும் இந்த படத்தை  சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அதற்கு மாறாக ரஜினியின் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடொக்ஷன் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  
 
"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்ன சோகத்தில் முருகதாஸ் மூலையில் முடுங்க லைக்கா நிறுவனம் குதூகலத்தில் ஆடிவருகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு 2.0 படம் வெளியாகும் அன்று தெரியவரும் என எதிர்பார்க்கலாம் 
 
சன் பிச்சர் தயாரிக்க இருந்த ரஜினி படம் லைக்கா நிறுவனத்திற்கு கைமாறியதற்கு என்ன காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தபோது, சர்காரை இயக்கிய முருகதாஸ் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
 
அதுமட்டுமின்றி தற்போது ரஜினிகாந்த் அரசியில் குதிக்க நேரம் பார்த்து காத்திருக்கும் இந்த தருவாயில்,  சன் பிச்சர் நிறுவனமே ரஜினிக்கு எமகண்டமாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில்
லைக்கா புரோடுக்ஷனுக்கு  வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றுகிறது இன்னொறு ஆய்வு. 
 
எது எப்படியோ நமக்கு படம் நல்லா இருந்தால் சரி! 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்