சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் 240 பேருக்கு புற்றுநோய்
சனி, 24 நவம்பர் 2018 (15:19 IST)
தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் வேலைபார்த்த 240 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவில் சாம்சாங் நிறுவனமானது உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி நிறுவனமாகவும் கணினி சிப் தயாரிப்பாளராகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
சாம்சங் செமி கண்டக்டர் மற்றும் கணினி திரை தயாரிப்பு துறையில் பணியாற்றி வந்த 240 பேர் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களில் 80 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாதிரடமும் சாம்சங் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தொழிலாளர்களின் நலனை காக்கதவறியதாக சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.