நடிகர் ரஜினிகாந்த் தலைவி படத்தை பார்த்து இயக்குனர் விஜய்யை பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது.
மக்களை திரையரங்குக்கு பெரியளவில் இந்த படம் இழுக்கவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படம் திரையிட்டுக் காட்டப்பட்டதாகவும் , படம் பார்த்த பின் அவர் இயக்குனர் ஏ எல் விஜய்யை பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.