இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் “ஒவ்வொரு படைப்புக்கும் பயணமும் இலக்கும் இருக்கிறது. பல தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் சீசன் 1 வெப் தொடரை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடையை திறமையான குழுவினருடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அனிமேசன் படமான கோச்சடையான், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 ஆகியவற்றை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்நிலையில் தான் வெப் சிரிஸ் இயக்குவதாக அவர் அறிவித்துள்ள நிலையில் அது அனிமேஷன் தொடரா? லைவ் ஆக்ஷன் தொடரா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளது.