பூசணிக்காய் உடைக்கப்பட்ட ரஜினிகாந்தின் ‘கூலி’… அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (07:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கடந்த சில வாரங்களாக படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் உடனடியாகத் தொடங்கி இந்த ஆண்டின் பின் பாதியில் ‘கூலி’ படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்