மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் நடிகர் கார்த்தியும், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவும். அப்போது அவர் கைதி 2 பற்றி குறிப்பிட்டு அதில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரையும் டேக் செய்திருந்தார். இதன் மூலம் கைதி 2 படத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிறுவனம்தான் விஜய்யின் ஜனநாயகன் படத்தைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.