என் படங்களை விட இளையராஜா சூப்பராக இசையமைத்து இவருக்குத்தான்: ரஜினி ஆதங்கம்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:00 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. 


 
கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில்  நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
இந்நிலையில், இரண்டாம் நாளாக இன்று நடந்த  நிகழ்ச்சியில் பல்வேறு திரை உலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு தான் இளையராஜா மிக நன்றாக இசை அமைத்திருக்கிறார். முதல் படத்திலிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது. திரைத்துறைக்காக பல தியாகங்களை செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு என்றார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்