ரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா?

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (18:30 IST)
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் பேட்ட படத்தோடு சினிமாவை ஓரங்கட்டிவிட்டு  முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என நினைத்தால் அதுதான் இல்லை. அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது.  இந்த படம் முருகதாஸின் கத்தி, சர்கார் படங்களை விட ஒரு படி மேலே சென்று அரசியல் பேச உள்ளதாம் . இதனை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த படத்துக்கு " நாற்காலி "என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படம் என்றாலே சர்ச்சையான குறைவு இல்லாதவகையில் இருக்கும் ஆக "நாற்காலி" என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான அதிகார்ப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்