ரஜினியின்’ அடுத்த அரசியல்’ படம் ! வைரலாகும் ’ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்

திங்கள், 14 ஜனவரி 2019 (20:17 IST)
இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ்   இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் உங்கள் குரல் குரல் உங்கள் ஓட்டே என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. அனிருத் இசையமைப்பதாகவும் தெரிகிறது.
பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த பட வேலைகள் பற்றிய பேச்சுகள் வெளியாகின்றன.
 
குறிப்பாக ரஜினியின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவதாகவும், அதற்கு ரஜினி 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின.
 
மேலும் இதுபற்றி பேசிய முருகதாஸ் ரஜினியை சந்தித்து கதை கூறியதாகவும், விரைவில் அவரிடம் இருந்து அழைப்பு வரும் எனவும் கூறினார்.
 
இந்நிலையில் 'நாற்காலி' என்ற ரஜினி படத்துடன் கூடிய ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  அதில் 'உங்கள் ஓட்டு உங்கள் குரல்' என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இது அதிகாரபூர்வமான போஸ்டர் என்று இதுவரை தகவல் வெளியாக வில்லை. இது ரசிகர்களால் வெளியிடப்பட்டிருக்கலாம என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்