சிட்டியில் பேட்ட; கிராமத்தில் விஸ்வாசம் – பின்னணி என்ன ?

திங்கள், 14 ஜனவரி 2019 (10:13 IST)
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களில் பேட்ட நகரங்களிலும் விஸ்வாசம் கிராமப்பகுதியிலும் நல்ல வசூல் செய்து வருகின்றன.

பேட்ட, விஸ்வாசம் என இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு கலவையான உணர்வையும் அளித்துள்ளன. பேட்ட படம் ரஜினியின் இளமை துள்ளலான ரஜினிக்காவும், விஸ்வாசம் படம் குடும்ப செண்ட்டிமெண்ட்காகவும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கான விடுமுறைகள் முடிய இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இருப்பதால் இரண்டுப் படங்களும் வசூலில் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் ரிலிஸாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தின் வசூல் ரிப்போர்ட்கள் ஏரியா வாரியாக வெளியாகி வருகின்றன. இதில் பேட்ட படம் நகர்ப்புறங்களில் நல்ல அளவில் வசூல் செய்துவர விஸ்வாசம் படம் கிராமப்புற ஏரியாக்களில் சக்கைப் போடு போடுகிறது.

இதற்குக் காரணம் என விசாரித்தால் பேட்ட படம் சாதி ஆணவக்கொலைகள் பற்றிப் பேசுவதால் கிராமப் புறங்களில் அதிகளவில் எடுபடவில்லை என்றும் விஸ்வாசம் படத்தில் இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் கிராமத்து மனிதராக அஜித் நடித்துள்ளதும் ஒருக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் விஸ்வாசம் படத்தில் குடும்பம், திருவிழா, கூட்டுக்குடும்பம் மற்றும் குழந்தை செண்ட்டிமெண்ட் எனப் பல மசாலா விஷயங்கள் இருப்பதால் கிராமத்து மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்