ரஜினி – லோகேஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (07:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வில் ஒரு நிபந்தனையைக் கொண்டு வந்துள்ளாராம். இதற்கு முன்னர் லோகேஷ் படத்தில் நடித்தவர்கள் யாரையும் தேர்வு செய்ய வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால் இந்த படம் LCU இல்லை என ஏற்கனவே அவர் சொல்லிவிட்டதால், தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்