அவார்டு கிடைக்குனு சொன்னதும் பேக் அடிச்சிட்டேன்… லால் சலாம் அனுபவம் பகிர்ந்த ரஜினி!

vinoth

சனி, 27 ஜனவரி 2024 (11:49 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினிகாந்த் விஜயகாந்த் மற்றும் பவதாரணி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அப்போது “இந்த கதைய முதலில் ஐஸ்வர்யா என்னிடம் சொல்லும்போது நான் தயங்கி பேக் அடிச்சிட்டேன். எனக்கு அவார்ட் எல்லாம் முக்கியம் இல்லை. ரிவார்டுதான் முக்கியம் என்றேன்.

பின்னர் கதாசிரியரிடமும் முழுக்கதையும் கேட்ட பின்னர் இதில் யாராவது பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். பின்னர் நானே நடிக்கிறேன் என்று சொன்ன போது ஐஸ்வர்யா முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இந்த நேரத்துக்கான அரசியல் கொண்ட கதையாக லால் சலாம் இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்