ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ்… உறுதி செய்த மணிரத்னம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:31 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் செப்டம்பர் 6 ஆம் தேதி நடக்க உள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளன. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதை மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்