பொன்னியின் செல்வன் ‘பொன்னி நதி’ பாடலை பாடிய பாடகர் காலமானார்!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (07:51 IST)
பொன்னியின் செல்வன் ‘பொன்னி நதி’ பாடலை பாடிய பாடகர் காலமானார்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி என்ற பாடலை பாடியவர்களில் ஒருவரான பம்பா பாக்யா திடீரென காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல திரைப்பட பாடகர் பம்பா பாக்யா காலமானார் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடலை இவர் ஏஆர் ரகுமான் மற்றும் ஏஆர் ரஹைனா ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி சிம்டாங்காரன் உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது பாடல் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபல பாடகர் பம்பா பாக்யா மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்