RRR படத்தின் இரண்டாம் பாகம… இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் – ராஜமௌலி பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:13 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல் பிரிவுகளில் நாமினேட் செய்தார் ராஜமௌலி. இதையடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் பெருமகிழ்ச்சியில் இருக்கும் RRR படக்குழுவிடம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா எனக் கேட்கப்பட்டது.  அதற்குப் பதிலளித்த ராஜமௌலி “கண்டிப்பாக வரும். படம் பற்றிய ஒரு ஒன்லைனை கீரவாணி என்னிடம் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது தந்தையிடம் அந்த யோசனையைக் கூறி எழுத முடிவெடுத்துள்ளோம்.” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்