என் வீட்டில் மழை நீர் புகுந்துள்ளது- ரஜினி பட இசையமைப்பாளர் டுவீட்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (15:17 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில்  பல மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்றிரவு 24 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பருவமழையால், சென்னையில் பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கபாலி, காலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், 3 மணி நேரத்திற்கு முன் என் வீட்டிற்குள் மழை நீர்  புகுந்துள்ளது. அத்துடன் சாலையிலும் மழை நீர் 2 அடிக்கு மேல் உள்ளது.நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா ?எனக் கேட்டு அவர் வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்