வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலவர் முக.ஸ்டாலின் தலைமையில், , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய பகுதிகளில் மிக கனமழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதேபோன்ற சவாலாக அமைந்திருந்தது. அதேபோன்ர நிலை வரக்கூடாது என இதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இம்முறை மழை நீர் வெள்ளம் தேங்காதவாறு மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதிற்ப்பிற்குள்ளாகும் பகுதிகளை கண்காணிக்க பல்துறை மண்டலங்கள் அமைக்க வேண்டும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், என்ணெய் நிறுவனங்கள், கைப்பேசி நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். பாதிற்பிற்குள்ளான மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர், உணவு, இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்! ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் முன்கூட்டி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,