ரஹ்மானின் சிறியத் தவறு ; இளையராஜாவின் செல்லக்கோபம் – களைகட்டிய இளையராஜா 75

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (17:02 IST)
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இளையராஜா 75 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 
இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால் தலைமையில் நடக்க்கும் பாராட்டு விழாவின் முதல்நாள் விழா நேற்றுத் தொடங்கியது. இந்த விழாவில் இந்த விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விழாவின் முதல் நாள் ஆளுநர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதையடுத்து இளையராஜா 75 மலரையும் வெளியிட்டார்.

விழாவின் சிறப்பு அங்கமாக இளையராஜாவும் ரஹ்மானும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் போன்ற நிக்ழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய இளையராஜா ‘ரஹ்மான் அவரது தந்தையோடு இருந்ததை விட என்னோடுதான் அதிகமாக இருந்தார். என்னிடம் 500 படங்களுக்கு மேலாக வேலை செய்துள்ளார்’ எனக் கூறினார்.

பின்பு இளையராஜா இசையில் ரஹ்மான் கீபோர்டு வாசித்த மன்றம் வந்த தென்றல் பாடலுக்கு ரஹ்மான் இசையமைக்க ராஜா அந்தப் பாடலைப் பாடினார். அப்போது பாடல் முடியும் தருவாயில் ரஹ்மான் சிறியத் தவறுடன் கீபோர்டு வாசிக்க அதைக் கண்டுபிடித்த இளையராஜா ‘உனக்குத்தான் டியூன் தெரியுமே..,, பிறகு ஏன் தவறாக வாசிக்கிறாய்’ எனச் செல்லமாகக் கடிந்துகொண்டார்.

அதைகேட்ட ரஹ்மான் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே கீபோர்டை விட்டு விலகிச் சென்றார். மேலும் புன்னகை மன்னன் படத்தின் தீம் மியூசிக்கையும் வாசித்துக் காட்டினார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்