சினிமா விநியோகத்தில் கால்பதிக்கும் பி வி ஆர் நிறுவனம்… கர்ணன் பட உரிமையை கைப்பற்றியது!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (08:35 IST)
சினிமா திரையரங்குகள் நிறுவனமான பி வி ஆர் இப்போது விநியோகத்துறையிலும் களமிறங்கியுள்ளதாம்.

பிவிஆர் நிறுவனம் இந்திய அளவில் மால்களில் சினிமா திரையரங்குகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையின் முக்கியத் திரையரங்கான சத்யம் திரையரங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பி வி ஆர் நிறுவனம் சினிமா விநியோகத்திலும் இறங்க முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் ரிலீஸாக உள்ள கர்ணன் திரைப்படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளதாம். செங்கல்பட்டு ஏரியாக்களில் உள்ள மால்களில் மட்டும் கர்ணன் படத்தை பிவிஆர் நிறுவனம் வெளியிட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்