லோகோவை மாற்றிய அமேசான்... குழப்பத்தில் நெட்டிசன்கள் ....

புதன், 3 மார்ச் 2021 (17:16 IST)
உலகமெங்கும்  ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். இந்நிறுவனத்தின் லோகாவை மாற்றியுள்ளதற்கு நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டுவருகின்றனர்.

உலகில் உள்ள பெரும் பணக்காரார்களில் முதலிடத்தில் உள்ளவர் அமேசான் நிறுவனத்தி தலைவர் ஜெப் பெகாஸ். இவரது அமேசான் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஏ முதல் இசட் வரையிலான பொருட்கள் அனைத்துமே விற்கப்படுகிறது.

மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள அமெசான் நிறுவனம் குறைந்த நேரத்தில் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதிலும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதிலும் பெயர் பெற்றுள்ளது. இதனால் இதற்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

இந்நிலையில், இ காமர்ஸ் நிறுவனமாக அமேசான் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பயனாளர்கள் பயன்படுத்தும் செயலியின் லோகோவை மாற்றியுள்ளது.

எந்த அறிவிப்புமின்றி மாற்றப்பட்டுள்ள இந்த லோகோ குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்