''உங்கள் ரசிகனாகப் பெருமைப்படுகிறேன் தளபதி''- விஷால் நெகிழ்ச்சி டுவீட்

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:20 IST)
நடிகர் விஜய்யின் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஷால். இவர்   ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்.  தற்போது நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா , சுனில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

டைம் டிரேவல் மற்றும் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்கலளுக்கு முன் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் டிரைலர் நடிகர் விஜய் வெளியிட்டார். இந்த நிலையில்,  நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி பட டீசைப் பார்த்த பின், இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கூறியிருந்தார் விஜய்.

இந்த நிலையில், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  நடிகர் விஜய், விஷால் சார்பில், அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் விஜய் மற்றும் விஷால் வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோ வைர்லாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்