மீண்டும் ரிலீஸாகும் குஷி படம்! விஜய் ரசிகர்களுக்குதான் ’குஷி’ இல்லை!

திங்கள், 26 டிசம்பர் 2022 (12:03 IST)
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து தமிழில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் ‘குஷி’. 2000ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் ஜோதிகா, விவேக், மும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2001ல் இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகனாக பவண் கல்யாணும், நாயகியாக பூமிகா சாவ்லாவும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற இந்த படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 31ம் தேதி தெலுங்கு குஷி படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பவண் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டில் குஷி கிடைக்கவில்லை என்றாலும், பொங்கலில் வாரிசுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்