என்னது நீங்க படத்துல நடிக்கலையா… வீடியோ வெளியிட்ட படக்குழு – கப்சிப்பான கௌதம் மேனன்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (18:06 IST)
கௌதம் மேனன் ஹீரோவாக நடிப்பதாக வெளியான போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் ஷேர் செய்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கௌதம் வாசுதேவ் மேனன். சமீப காலமாக பல படங்களில் குணசித்திர கதாப்பாத்திரங்கள், வில்லன் கேரக்டர்களிலும் கௌதம் மேனன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கௌதம் மேனன் ஹீரோவாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்ட இயக்குனர் பா.ரஞ்சித், கௌதம் மேனன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கௌதம் மேனன், இந்த தகவல் தனக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும், அப்படி தான் எந்த படமும் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பதிவை பா.ரஞ்சித் நீக்கியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், படத்தில் கௌதம் மேனன் நடித்துள்ள சில காட்சிகளை வெளியிட்டு படத்தில் அவர் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளனர். அப்படி இருக்கையில் கௌதம் மேனன் அந்த படத்தின் இயக்குனர் பெயரையே கேள்விப் பட்டதில்லை என சொன்னதற்குக் காரணம், தயாரிப்பு நிறுவனம் திடீரென பாதிப் படத்தை இயக்கிய இயக்குனரை நீக்கிவிட்டு புதிதாக ஒரு இயக்குனரை நியமித்ததுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்