இந்தி பேசுபவரை அறைவது ஏன்? ஜெய் பீம் சர்ச்சை குறித்து பிரகாஷ்ராஜ் பதில்!

சனி, 6 நவம்பர் 2021 (17:24 IST)
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்தது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

ஆனால் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்த ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை விசாரிக்கும் போலிஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜிடம் இந்தியில் பேசும் வட இந்தியர் ஒருவரை அறைவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இது அந்த படம் பேசும் மையக் கருத்துக்கே முரணாக இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து இப்போது பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். அதில் ‘அந்த படத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைதான் பார்த்துள்ளார்கள். இது அவர்களின் மனநிலையையும் புரிதலையும் காட்டுகிறது. கேள்வி கேட்காமல் இருக்க அதிகாரியிடம் இந்தியில் பேசினால் அந்த கதாபாத்திரம் அப்படிதான் நடந்துகொள்ளும். முறையான கல்வி பெறாமல் இருக்கும் பழங்குடி மக்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்