பிகில் வெற்றி பெற்றது இதனால்தான்…. அட்லி எல்லாம் ஒன்னுமில்ல – பிரபல தயாரிப்பாளர் அதிரடி !

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (09:09 IST)
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெற்றி பெற்றது விஜய்க்காகதானே ஒழிய அட்லிக்காக இல்லை என பிரபல தயாரிப்பாளரான கேயார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தவருமான கேயார் பிகிலின் வெற்றி குறித்து பேசியுள்ளார். அதில் ‘விஜய் சுமாரான படம் கொடுத்தாலும் கண்டிப்பாக அது சூப்பர் ஹிட் தான் என்பது பிகில் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. படம் சுமாராக இருந்தாலும் அது விஜய் எனும் நடிகருக்காகதான் ஓடியது. அட்லிக்காக எல்லாம் ஓடவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்