நடிகர் சூர்யா நடித்த "கருப்பு" திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி, சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு இது ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சிங்கம்" மற்றும் "வேல்" போன்ற படங்களை போலவே, ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இருக்கும் என்று படக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இன்று வெளியான டீசரில் ரிலீஸ் தேதி குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால், "இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை" என்று வழக்கம்போல் சில YouTube சேனல்களில் வதந்திகள் கிளப்பி வருகின்றனர்.
இருப்பினும், படக்குழுவினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, தீபாவளிக்கு "கருப்பு" திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என்றும், விரைவில் ரிலீஸ் தேதியுடன் கூடிய அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு "கருப்பு" திரைப்படம் வெளியாகிறது என்பதால்தான், கார்த்தியின் "சர்தார் 2" திரைப்படமே பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பதும், எனவே நீண்ட விடுமுறை நாட்களுடன் கூடிய பண்டிகை தேதியை "கருப்பு" படக்குழுவினர் தவறவிட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.