மன்னித்து விடுங்கள் அண்ணா – சாந்தனுவிடம் கூறிய கௌரி கிஷன் !

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (08:44 IST)
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறுதலாக சாந்தனு மேம் எனக் கூறிவிட்ட கௌரி கிஷன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா மற்றும் கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று முன் தினம் மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள கௌரி கிஷன் மேடையில் பேசிய போது அனைவரையும் குறிப்பிட்டு சிலாகித்து பேசினார். அப்போது சக நடிகரான சாந்தனுவைப் பற்றி பேசும் போது ’சாந்தனு மேம்’ எனத் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டார்.இதை உணர்ந்து மேடையிலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டும் சாந்தனு சார் எனக் கூறினார்.

ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் பலரும் கேலி செய்ய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அண்ணா என்று கூறுவதற்குப் பதில் மேம் என்று கூறிவிட்டேன். மன்னித்து விடுங்கள் அண்ணா’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்