பிகில் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக கிடு பிடி சோதனை நடத்தினார்கள்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியானது.
அதன்பின்னர், பனையூர் 8வது அவென்யூவில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் ஐடி துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, வருன்மான வரி சோதனை நிறைவு பெற்றதாகக் கூறி, சோதனையின் போது, அதிகாரிகள் வைத்த சீலை அகற்றினர்.
இதனைத்தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில், பிகில் படத்தில் நடிகர் விஜய் ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்தில் நடிக்க ரு. 80 கோடியும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.