தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கும் ஜி வி பிரகாஷ் & பிரியங்கா மோகன்!

vinoth
வியாழன், 14 மார்ச் 2024 (08:16 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் –ஐ இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து வேறு சில படங்களில் நடித்து வரும் இப்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஜி வி பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனராம். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர்கள் இந்த பாடலில் நடித்துள்ளதாக, அந்த பாடலை படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்