நானும் பப்லுவும் திருமணம் செய்துகொள்ளவில்லை… ப்ரேக் அப் பற்றி மனம் திறந்த ஷீத்தல்!

vinoth
திங்கள், 18 மார்ச் 2024 (14:05 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பப்லு, இவர், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா, கார்த்தியுடன்  பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆவார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வானமே எல்லை திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தபோது, சின்னத்திரையில், பல தொடர்களிலும், சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 57 வயதாகும் இவர் தன்னை  விட 30 வயது குறைந்த மலேசிய பெண்ணான ஷீத்தல் என்பவரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பெருமளவில் உருவாகி வந்தனர். பிருத்விராஜ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவர்.

இந்நிலையில் இப்போது பிருத்விராஜ் ஷீத்தல் இடையிலான காதல் சில வருடங்களுக்காகவே பிரிந்தது. இதுகுறித்து இருவருமே மௌனம் காத்து வந்த நிலையில் இப்போது ஷீத்தல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “அனைவரின் அன்புக்கும் நன்றி. நானும் பிரித்விராஜும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால் அந்த உறவு நாங்கள் எதிர்பார்த்தது போல செல்லவில்லை. அதனால் நாங்கள் சில மாதங்களாகவே பிரிந்திருக்கிறோம். இப்போது இருவருமே சிறப்பான நிலையில் இருக்கிறோம். அனைவரும் எங்கள் முடிவை புரிந்துகொண்டு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்