தனது வித்யாசமான நடனத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரபுதேவா. நடனம் மட்டுமின்றி நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் ஜொலிப்பவர். ஏப்ரல் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளன்று பிரபு தேவா, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் "யங் மங் சங்"படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார்
அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப்பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா