ரஜினி தொடங்கி வைத்த காரியத்தால் சிக்கலில் சிக்கிய முன்னணி ஹீரோக்கள்!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (12:57 IST)
வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு நஷ்ட ஈடுத் தொகை கொடுக்கும் பழக்கத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் ஆரம்பித்து நல்ல எண்ணத்தில் வைத்தார்.


 
 
ஆனால், இந்த விஷயம் அவருடன் சேர்ந்து மற்ற ஹீரோகளுக்கும் எதிராக அமைந்தது. 
 
அதன்படி விஜய் நடித்த 'பைரவா' படம் சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்ய ரூ.5 கோடி கொடுத்தால் அடுத்த படம் வெளியாகும்.
 
சூர்யாவின் சி-3 சந்தித்த நஷ்டத்தை ரூ.10 கோடி கொடுத்து ஈடு செய்து அடுத்த படத்தை வெளியிட வேண்டும்.
 
இதே போல ஜெயம் ரவியின் போகன் ரூ. 6 கோடி கொடுத்தால் தான் அடுத்த படத்தை வெளியிட முடியும் என்கிறார்கள். 
 
இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் இருப்பதாகச் தெரிகிறது. 
 
விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து என்ன முடிவுகள் எடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு தொற்றியுள்ளது.
அடுத்த கட்டுரையில்