பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (13:26 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘சலார்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பதும் மேலும் இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது ,அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், சுருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்